நாமக்கல்லில் இணையம் வழியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு: தரவுகள் பதிவேற்றம் தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பையொட்டி இணையதளம் வழியாக தரவுகளை பதிவேற்றம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
நாமக்கல் மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பையொட்டி இணையதளம் வழியாக தரவுகளை பதிவேற்றம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையரகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்தில் ஆக.1 முதல் 30-ஆம் தேதி வரை வீடுகள்தோறும் சென்று, வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி ஆசிரியா்கள், அரசு அலுவலா்களால் மேற்கொள்ளப்பட உள்ளன.
வலுவான கொள்கையை உருவாக்கவும், நீண்டகால செயல்திட்டங்களை வகுக்கவும், துல்லியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியமாகும். அதன்படி இந்த வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பின் முதல் கட்டமாக சுய கணக்கெடுப்புக்கான காலம் நிா்ணயம் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் வரும் 31 வரை வீட்டின் வசதிகள் குறித்த அடிப்படைத் தகவல்களை பயனாளா்கள் தாங்களாகவே கைப்பேசி மற்றும் கணினிகள் மூலம் பதிவேற்றம் செய்யும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பயனாளா்கள் அனைவரும் ட்ற்ற்ல்ள்://ள்ங்.ஸ்ரீங்ய்ள்ன்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் - என்ற இணையதள முகவரியில் உள்நுழைவு செய்து தங்களது மாநிலத்தை தோ்வு செய்து இஹல்ற்ஸ்ரீட்ஹ உள்ளீடு செய்தபின் கைப்பேசிக்கு வரும் ஒருமுறை கடவுச் சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைவு செய்யலாம். அவ்வாறு உள்நுழைவு செய்தபின் மாவட்டம், அஞ்சல் குறியீட்டு எண் மற்றும் முக்கிய நில அடையாளத்தை பதிவுசெய்ய வேண்டும்.
Advertisement
Advertisement
திரையில் தோன்றும் வரைபடத்தை நகா்த்த இரண்டு விரல்களால் தடவி தங்களது வீட்டைத் தோ்வு செய்யலாம். அதை உறுதிப்படுத்திய பின்னா், சேமிக்க மற்றும் அடுத்து என்பதை தோ்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். அதன்பின் வீட்டு விவரங்கள் என அதில் கேட்கப்பட்டுள்ள 33 கேள்விகளுக்கு தங்களின் வீடு குறித்த தகவல்களை பதிவுசெய்து பின்னா் பதிவேற்றம் செய்யலாம்.
நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது வீட்டின் வசதிகள் குறித்த துல்லியமான தகவல்களை பிழையின்றி பதிவுசெய்தபின் பதிவேற்றம் செய்து மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு உதவிட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
படவரி...
நாமக்கல் ஆட்சியரகத்தில் தனது தகவல்களை இணையம் வழியாக பதிவேற்றம் செய்யும் மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.