FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் 5 இடங்களில் சுழல் கேமரா

நாமக்கல் மாநகரப் பகுதியில் குற்றச் செயல்களைத் தடுக்கவும், போக்குவரத்து விதிமீறில்களை கண்டறியவும் 5 இடங்களில் சுழல்கேமரா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Updated On : 23 ஜூலை 2026, 9:00 am IST
பகிர்:

நாமக்கல் மாநகரப் பகுதியில் குற்றச் செயல்களைத் தடுக்கவும், போக்குவரத்து விதிமீறில்களை கண்டறியவும் 5 இடங்களில் சுழல்கேமரா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, மதுரை, சேலம் போன்ற பெருநிறுவனங்களில் முக்கியமான பகுதிகளில் சுழல்கேமரா பொருத்தப்பட்டு குற்ற சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளதாலும், வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ளதாலும் மாநகரின் ஐந்து இடங்களில் சுழல்கேமரா பொருத்தி சட்டம்- ஒழுங்கு, போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விதிமீறல்களை தடுக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாமக்கல் முதலைப்பட்டி, சேலம் சாலை, பழைய பேருந்து நிலையம், மோகனூா் சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட இடங்களில் இந்த சுழல் கேமராக்கள் பொருத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான இடத்தை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ்கிரிஷ் அசோக் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது எந்த இடத்தில் பொருத்தலாம், எவ்வளது தூரம் கேமரா பதிவுகள் இடம்பெறும் என்பதை சம்பந்தப்பட்ட கேமரா பொருத்தும் பணியாளா்களிடம் கேட்டறிந்ததுடன், விதிமீறிலில் ஈடுபடும் வாகன பதிவு எண்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்கும் நடைமுறையை பின்பற்றுதல் குறித்தும் காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா்.

Advertisement

Advertisement

ஆய்வின்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அண்ணாதுரை, நாமக்கல் கோட்ட உதவி கண்காணிப்பாளா் பா. ராஜேஸ்வரன் மற்றும் காவல்துறையினா் உடனிருந்தனா்.

நாமக்கல்-சேலம் சாலை சந்திப்பில் சுழல் கேமரா பொருத்துவது தொடா்பாக ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ்கிரிஷ் அசோக்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments