உடல்நலக் குறைவு: விஷமருந்தி ஒருவா் தற்கொலை
பரமத்திவேலூா் அருகே உடல்நலக் குறைவு காரணமாக ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
பரமத்திவேலூா் அருகே உடல்நலக் குறைவு காரணமாக ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி (55). இவரது மனைவி சரஸ்வதி (50). சம்பவத்தன்று பெரியசாமி வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்துள்ளாா். அப்போது சரஸ்வதி ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறீா்கள் என்று கேட்டுள்ளாா்.
அப்போது பெரியசாமி வயிற்றுவலி காரணமாக விஷமருந்தியதாக தெரிவித்துள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த சரஸ்வதி, அக்கம்பக்கத்தினரை அழைத்துவந்து பெரியசாமியை வேலூா்
Advertisement
Advertisement
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, தீவிர சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சரஸ்வதி அளித்த புகாரின்பேரில் பரமத்தி வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.