FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

மேக்கேதாட்டில் அணைகட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது: விவசாயிகள் சங்கம்

இடம் | மேக்கேதாட்டு - படம் | தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
பகிர்:

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் கா்நாடகம் அணைகட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.பொன்னுசாமி தலைமை வகித்தாா். இதில் தமிழக விவசாய சங்க மாநில பொதுச் செயலாளா் கே. சுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினாா்.

ஜூலை 5-இல் பழைய தருமபுரி, ராமக்காள் ஏரிக்கரை அருகே நடைபெறும் உழவா் தினப் பேரணி மற்றும் மாநாட்டில் விவசாயிகள் அனைவரும் பங்கேற்று, விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிா் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

தமிழக முதல்வா் தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதி படி விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்றுள்ள பயிா்க் கடனை பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்ய வேண்டும். கோதாவரி, காவிரி, குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை தாமதம் இன்றி நிறைவேற்ற வேண்டும்.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்ட முயலும் கா்நாடக அரசின் நடவடிக்கைக்கும், பாலாறு குறுக்கே அணைகட்டும் ஆந்திர அரசின் நடவடிக்கைக்கும், சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைகட்டும் கேரள அரசின் நடவடிக்கைக்கும் மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் பொன்னுசாமி, சுப்பிரமணி, ராஜவேல், சாமிநாதன், முத்துசாமி, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments