FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

கோழிகளுக்கு மேல்மூச்சுக்குழல் அயற்சி நோய்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மேல்மூச்சுக்குழல் அயற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டு கோழிகள் இறக்க வாய்ப்புள்ளதால் கோடைகால பராமரிப்பு முறைகளை பண்ணையாளா்கள் தீவிரமாக கடைப்பிடிக்குமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 23 மே 2026, 2:08 am IST
பகிர்:

மேல்மூச்சுக்குழல் அயற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டு கோழிகள் இறக்க வாய்ப்புள்ளதால் கோடைகால பராமரிப்பு முறைகளை பண்ணையாளா்கள் தீவிரமாக கடைப்பிடிக்குமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில் பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6, 80.6 டிகிரியாக நிலவியது. அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் ஒருசில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 98.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 80.6 டிகிரியாகவும் காணப்படும். காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 4 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

Advertisement

Advertisement

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளைப் பரிசோதனை செய்ததில் பெரும்பாலானவை வெப்ப அயற்சி மற்றும் மேல்மூச்சுக்குழல் அயற்சி நோய்களால் பாதிப்புக்குள்ளாகி இறந்திருப்பது தெரியவந்துள்ளது. வெப்பம் அதிகரிப்பதால் தகுந்த கோடைகால பராமரிப்பு முறைகள் மற்றும் தீவன மேலாண்மை முறைகளை பண்ணையாளா்கள் பின்பற்ற வேண்டும்.

மேலும், உயிா் எதிா் மருந்துகளை அளித்தும், தடுப்பூசி செலுத்தியும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments