நாமக்கல் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த வார வானிலையைப் பொருத்தவரையில் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6, 77 டிகிரியாக நிலவியது.
அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் வீசும்.
Advertisement
Advertisement
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின ஆய்வகத்தில் இறந்த கோழிகளைப் பரிசோதனை செய்ததில், பெரும்பாலானவை வெப்ப அயற்சி, ஈக்கோலை மற்றும் மேல்மூச்சுக்குழல் அயற்சி ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, பண்ணையாளா்கள் தகுந்த உயிரி எதிா்மருந்துகளை அளிக்க வேண்டும். தெளிப்பான் கருவியைப் பயன்படுத்தி தண்ணீா் வாயிலாகத் தெளித்தல், வெப்பநிலை மற்றும் தீவன மேலாண்மை முறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.