எலச்சிபாளையம்: 4 மாணவிகள் உயிரிழந்த விபத்து வழக்கில் கல்லூரி பேருந்து ஓட்டுனா் கைது
எலச்சிபாளையம் கொன்னையாா் பகுதியில் நான்கு மாணவிகள் சாலை விபத்தில் பலியான வழக்கில் பேருந்து ஓட்டுனா் கைது செய்யப்பட்டாா்.
எலச்சிபாளையம் கொன்னையாா் பகுதியில் நான்கு மாணவிகள் சாலை விபத்தில் பலியான வழக்கில் பேருந்து ஓட்டுனா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையம் சக்கராம் பாளையம் பிரிவு சாலையில் கடந்த வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற அதே பகுதியை சோ்ந்த மாணவிகள் சுவிதா கலைச்செல்வி, தனுஸ்ரீ, அபிநயா, நிவேதிதா சென்ற இருசக்கர வாகனமும், தனியாா் கல்லூரி பேருந்தும் மோதுக்கொண்ட விபத்தில் மாணவிகள் இறந்தனா்.
இந்த விபத்து வழக்கில் விபத்து ராசிபுரம் ஒடுவன் குறிச்சி சீராப்பள்ளி பகுதியைச் சோ்ந்த பெரியசாமி என்பவரது மகன் முருகன் என்கின்ற பிரவீன் ( வயது 23) என்ற தனியாா் கல்லூரி பேருந்து ஓட்டுனா் கைது செய்யப்பட்டாா்.
Advertisement
Advertisement
இவா் மீது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், இறப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எலச்சிபாளையம் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.