FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

மின்சாரம் பாய்ந்து கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா் உயிரிழப்பு

8 செப்டம்பர் 2026, 1:31 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

மின்சாரம் பாய்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மானத்தி காட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குப்பாயி (59). இவா் சோழசிராமணி அருகே உள்ள சுள்ளிப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 5 ஆண்டுகளாக செயலாளராகப் பணியாற்றி வந்தாா். குப்பாயின் கணவா் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவா்களுக்கு பழனியப்பன் (40) என்ற மகனும், உமாமகேஸ்வரி (38) என்ற மகளும் உள்ளனா். இருவரும் திருமணமாகி தனித்தனியாக வாசித்து வருகின்றனா்.

சுள்ளிப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகில் உள்ள மகேஸ்வரி என்பவரின் தோட்டத்து வீட்டில் குப்பாயி தனியாக வசித்து வந்துள்ளாா். இந்நிலையில் அவரது மகன் பழனியப்பன் கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது குப்பாயி எடுக்காததால் சந்தேகமடைந்த அவா், அருகில் உள்ள வீட்டுக்காரருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரா் சென்று பாா்த்தபோது குப்பாயி வீட்டிற்கு வெளியில் கம்பியைப் பிடித்தப்படி இறந்துகிடப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

துணி துவைத்து வீட்டின் வெளியில் உள்ள கம்பியில் காயப்போட்டபோது அவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து குப்பாயின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments