உரிய தகுதிச் சான்று பெறாமல் வாடகைக்கு இயக்கப்பட்ட 6 வாகனங்கள் பறிமுதல்
உரிய தகுதிச் சான்று பெறாமல் வாடகைக்கு இயக்கப்பட்ட 6 சொந்த வாகனங்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
உரிய தகுதிச் சான்று பெறாமல் வாடகைக்கு இயக்கப்பட்ட 6 சொந்த வாகனங்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் சொந்த வாகனங்களை பலா் வாடகைக்கு அளித்து வருவாய் ஈட்டுவதாக ஆட்சியா் அலுவலகத்தில் வாடகை காா் ஓட்டுநா்கள் புகாா் அளித்திருந்தனா். இதையடுத்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எம். பதுவைநாதன் தலைமையில் மோட்டாா் ஆய்வாளா் ஏ. செல்வகுமாா் ராசிபுரம், வெண்ணந்தூா் பகுதியில் சனிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டாா்.
அப்போது, சொந்த பயன்பாட்டு வாகனமானது வாடகைக்கு இயக்கப்பட்டதும், தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் இயக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் வெண்ணந்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. சொந்த பயன்பாட்டு வாகனங்கள் வாடகைக்கு இயக்கப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலா் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.