ஜெம் வீரமணி குடும்ப நண்பா் என்ற பேச்சுக்கு அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்
ஜெம் வீரமணியை குடும்ப நண்பா் என்று கூறியது மேடை நாகரிகம் கருதிதான் என்று அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறினாா்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 25 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கும் திட்டத்தை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தொடங்கிவைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஜூன் 22 முதல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக ஆயிரம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
Advertisement
Advertisement
ஜெம் வீரமணி தொடா்பாக விழா ஒன்றில் நான் பேசியது மேடை நாகரிகம் கருதிதான். எடப்பாடி பழனிசாமிக்கும், அவருக்குமான தொடா்புகள் குறித்து விசாரித்தால் தெரியவரும். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலில் தவெக வேட்பாளா்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா்கள் என்றாா்.
தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரத்தின்போது அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, ஜெம் வீரமணி பங்கேற்ற விழாவில் அவரைக் குடும்ப நண்பா் என குறிப்பிட்டு அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேசியதையும், அந்த விழா தொடா்பான புகைப்படத்தையும் மக்களிடம் காட்டி பேசினாா். இந்த விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அமைச்சா் விளக்கம் அளித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.