FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கருணாநிதி மறைவு: மாவட்டத்தில் மௌன ஊர்வலம்

சங்ககிரி  ஒன்றிய,  நகரப் பகுதிகளில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உருவப்படத்துக்கு திமுகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

சங்ககிரி  ஒன்றிய,  நகரப் பகுதிகளில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உருவப்படத்துக்கு திமுகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும்,  நகரில் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்ற புதன்கிழமை மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. 
திமுக முன்னாள் ஒன்றியச் செயலர் பி.தங்கமுத்து தலைமையில் சங்ககிரி காவல் நிலையம் எதிரே இருந்து  திமுக, காங்கிரஸ், தமாகா,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,   மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கருப்புச் சட்டை அணிந்தும், கருப்புப் பட்டைகளை அணிந்தும் மௌன அஞ்சலி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று  பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது.  ஊர்வலத்தின் முடிவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்துக்கு  அனைவரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெயக்குமார், காசிலிங்கம், தமாகா ஜெகநாதன், ரத்தினம்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, வட்டச் செயலர் எஸ்.கே.சேகர், மதிமுக தங்கவேல், சுரேஷ்குமார், திமுக முன்னாள் நகரச் செயலர் முருகன், நிர்வாகிகள் சின்னத்தம்பி, சரவணன், ராஜவேல், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர். 
சங்ககிரி நகரப் பகுதி முழுவதும் அனைத்து மளிகைக் கடைகள், தனியார் மருத்துவமனைகள்,  மருந்தகங்கள், ஹோட்டல்கள்,  டீ கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சாலையில் இரு சக்கர வாகனங்கள் குறைந்த அளவிலேயே சென்ற வந்தன. கார்கள், கனரக வாகனங்கள் செல்லாமல் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
ஆத்தூரில்...
ஆத்தூரில்  கருணாநிதியின் மறைவையொட்டி  திமுக சார்பில் அனைத்துக் கட்சியினர் கலந்துகொண்ட மெளன ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
திமுக நகரச் செயலாளர் கே.பாலசுப்ரமணியம் தலைமையில் ஆத்தூர் பெரியார் சிலை முன் புறப்பட்ட மெளன ஊர்வலம் ஆத்தூர் பேருந்து நிலையம்,  ராணிப்பேட்டை, கடைவீதி, காமராஜனார் சாலை வழியாக  பெரியார் சிலையை சென்றடைந்தது. ஊர்வலத்தில் திமுக மாவட்டஇலக்கிய அணித் தலைவர் முல்லை பன்னீர்செல்வம்,துணைச் செயலாளர் ஏ. ராமச்சந்திரன், நூத்தப்பூரார் துரைஉடையார், எம்.மாணிக்கம், ரூபிநாகராஜன்,  முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் வி.ராஜாமணி, ஏ.ராஜசேகர், எம்.வேலுமணி, வேல்முருகன், ஜெ.காசியம்மாள், நாகராஜன், பாண்டியன், கதிரேசன், காங்கிரஸ் நகரத் தலைவர் எல்.முருகேசன், செல்வராஜ், பாமக மாவட்டச் செயலாளர் நடராஜன், பச்சமுத்து, நகரச் செயலாளர் மணிகண்டன், அனைத்து வணிகர்கள் சங்கம்,                         தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாழப்பாடியில்...
வாழப்பாடியில்,  முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மறைவையொட்டி அனைத்து கட்சிகள் சார்பில் மௌன ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து தி.மு.க. பா.ம.க., காங்கிரஸ், சமத்துவ மக்கள் கட்சி, த.மா.கா., உள்ளிட்ட அனைத்து கட்சியினர் பங்கேற்ற மௌன ஊர்வலம் நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்கு பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் பி.என்.குணசேகரன் தலைமை வகித்தார். 
தி.மு.க. நிர்வாகிகள் பன்னீர்செல்வம், சரவணன், கமல்ராஜா, பிரபாகரன், பெரியசாமி, சந்திராராயர்,  குணாளன், காங்கிரஸ் பிரமுகர்கள் ராஜா, ராஜாராம், மணிமாறன், சமத்துவமக்கள் கட்சி நிர்வாகி ஜவஹர், இலக்கியப் பேரவை நிர்வாகிகள் சிவ.எம்கோ  ஆகியோர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து  செலுத்தினர்.  
அக்கூட்டத்தில், தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், நெஸ்ட் அறக்கட்டளை, அரிமாசங்கம், இலக்கியப் பேரவை, இளைஞர் பேரவை மற்றும்  பொதுமக்களும் கலந்து கொண்டு, கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments