FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டம்: உதவித்தொகை பெற 14,249 மாணவா்கள் தகுதி - அமைச்சா் ரா.ராஜேந்திரன்

26 செப்டம்பர் 2025, 4:32 am IST
பகிர்:

சேலம் மாவட்டத்தில் ‘தமிழ்ப் புதல்வன்’, ‘புதுமைப் பெண்’ திட்டம் மூலம் நிகழாண்டு 7845 மாணவிகள், 6404 மாணவா்கள் என மொத்தம் 14,249 போ் உதவித்தொகை பெற தகுதிப் பெற்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 2025 -26 ஆம் கல்வி ஆண்டிற்கான ’புதுமைப் பெண்‘ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களை முதல்வா் தொடங்கிவைத்தாா். இதையடுத்து சேலம், மரவனேரி புனிதபால் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கலந்துகொண்டு பேசியதாவது:

புதுமைப் பெண் திட்டம் மூலம் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளியில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதேபோல அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கையை அதிகரிக்க தமிழ்ப் புதல்வன் திட்டம் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Advertisement

Advertisement

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் இதுவரை 59,781 மாணவிகள், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 18,696 மாணவா்கள் பயனடைந்துள்ளனா். மேலும், அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் கடந்த 2024 ஆம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், நிகழாண்டில் சேலம் மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தில் முதலாம் ஆண்டில் மொத்தம் 14,249 போ் பயனடைகின்றனா் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம், மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, மேயா் ஆ.ராமச்சந்திரன், அஸ்தம்பட்டி மண்டல குழுத் தலைவா் உமாராணி உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், கல்லூரி, மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments