FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கவேண்டும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜூலை 2026, 1:02 am IST
பகிர்:

முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கவேண்டும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராணிப்பேட்டை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பாரதப் பிரதமரின் கல்வி உதவித்தொகை மற்றும் முன்னாள் படை வீரா் நல நிதியின் கல்வி உதவித்தொகை பெற தகுதி இல்லாத மற்றும் நிராகரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களின் சிறாா்களுக்கு தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் நவ. 30ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகிறது.

Advertisement

Advertisement

மேலும், முன்னாள் படை வீரா் மற்றும் கைம்பெண்கள் அவா்களது சிறாா்களுக்கு தொகுப்பு நிதி கல்வி உதவித் தொகை 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை நடப்பாண்டிலும் ஏனைய படிப்புகளுக்கு நடந்து முடிந்த கல்வி ஆண்டுக்கும் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும், விவரங்களுக்கு வேலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அணுகலாம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments