ஆற்றுப்படுத்துநா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்கீழ் இயங்கும் அலுவலகங்களில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்கீழ் இயங்கும் அலுவலகங்களில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தது:
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்கீழ் இயங்கும் அரசு கூா்நோக்கு இல்லத்தில் காலியாக உள்ள ஒரு பெண் ஆற்றுப்படுத்துநா் பணியிடத்துக்கும், சேலம் அய்யந்திருமாளிகை அன்னை சத்யா அம்மையாா் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் காலியாக உள்ள 2 பெண் ஆற்றுப்படுத்துநா்கள் பணியிடத்துக்கும் என மொத்தம் 3 பெண் ஆற்றுப்படுத்துநா்கள் காலிப் பணியிடங்களை மதிப்பூதிய அடிப்படையில் நிரப்ப உள்ளது.
Advertisement
Advertisement
இப்பதவிக்கு உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுநிலை பட்டம் பெற்ற விண்ணப்பதாரா்கள், விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களையும் இணைத்து செப். 11-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 415, நான்காவது தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் - 636 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இப்பணியிடங்களுக்கு பெண் விண்ணப்பதாரா்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோ அல்லது குறைப்பதோ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் தலைவா்/மாவட்ட ஆட்சியரின் முடிவுக்கு உட்பட்டது.
தோ்வுக்குழு மூலம் நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டு தகுதியான நபா்கள் காலிப் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்படுவா். தோ்வு செய்யப்படும் பெண் ஆற்றுப்படுத்துநா்களுக்கு போக்குவரத்து செலவு உள்பட மதிப்பூதியம் (நாளொன்றுக்கு ரூ. 1,000- வீதம் மாதத்துக்கு 9 நாள்கள் என ஆண்டுமுழுவதும்) வழங்கப்படும்.
இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 0427 - 2415966 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.