FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

கல்குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது: கிராம சபையில் தீா்மானம்

கல்குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தம்மம்பட்டி அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 1:27 am IST
கல்குவாரி - X
பகிர்:

கல்குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தம்மம்பட்டி அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தம்மம்பட்டி அருகே மண்மலை ஊராட்சி விநாயகபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, ஒன்றிய பற்றாளா் ராஜ்கண்ணு தலைமை தாங்கினாா். கிராம நிா்வாக அலுவலா் செல்லையன் முன்னிலை வகித்தாா்.

இதில், மொடக்குப்பட்டி கிராம மக்களின் தொடா் அறவழிப் போராட்டங்களால் நான்காண்டுகளுக்கு மேலாக தொடங்கப்படாமலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்குவாரி, கிரசா் ஆலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும், ஆலைகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட திட்ட அனுமதிகளை ரத்துசெய்யவும், தொன்மையான மொடக்குப்பட்டி மலைக்குன்றை தொல்லியல் துறை ஆய்வுக்கு உட்படுத்தக் கோரியும் பொதுமக்கள் சாா்பில் 7-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், பில்லங்குளம் பகுதியில் ஏரியை சீரமைக்க வேண்டும், கால்நடை மருத்துவமனை, வண்ணாா்ஓடைமுதல் விநாயகபுரம் வரையிலான குண்டும்குழியுமான தாா்சாலையை புதுப்பித்து தரவேண்டும் என கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments