FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: சேலம் மாவட்டத்துக்கு ஆக.5 இல் உள்ளூா் விடுமுறை

Updated On : 27 ஜூலை 2026, 12:38 am IST
சேலம், கோட்டை மாரியம்மன் கோயிலில் விழா - கோப்புப் படம்
பகிர்:

கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆக. 5 ஆம் தேதி சேலம் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

சேலம் மாநகா் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு ஆக. 5 ஆம் தேதி (புதன்கிழமை) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த உள்ளூா் விடுமுறை தினத்தில் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். இந்த உள்ளூா் விடுமுறைக்குப் பதிலாக, ஆக. 8 ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments