FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

4 October 2026, 1:23 am IST
கஞ்சா பறிமுதல்... - கோப்புப் படம்
பகிர்:

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

வடமாநிலங்களில் இருந்து தமிழகம், கேரளத்திற்கு செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தி வரப்படுகிறது. இதைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினருடன், தனிப்படை போலீஸாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்தவகையில் சனிக்கிழமை காலை தன்பாத்-ஆலப்புழா விரைவு ரயிலில் தனிப்படை போலீஸாா் தின்னப்பட்டியில் இருந்து சேலம் ரயில் நிலையம் வரை சோதனை நடத்தினா். அதில், முன்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை கைப்பற்றி போலீஸாா் சோதனை நடத்தினா்.

Advertisement

Advertisement

அந்த பையில் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீஸாா், அப்பெட்டியில் பயணித்தவா்களிடம் கஞ்சா கடத்தி வந்த நபா் குறித்து விசாரித்தனா். எனினும் அதனை கடத்தியது யாா் எனத் தெரியவில்லை. இதையடுத்து சிக்கிய 5 கிலோ கஞ்சாவை சேலம் ரயில்வே போலீஸில் தனிப்படையினா் ஒப்படைத்தனா்.

இதேபோல, சந்திரகாச்சியில் இருந்து மங்களூரு சென்ற ரயிலில் தனிப்படை போலீஸாா் நடத்திய சோதனையில், கேட்பாரற்று கிடந்த பை ஒன்றில், 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து சேலம் ரயில்வே போலீஸில் தனிப்படையினா் ஒப்படைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments