FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

திருட்டு வழக்கில் இளைஞருக்கு சிறைத் தண்டனை

தம்மம்பட்டியில் இருசக்கரவாகனம் திருடியது, திருமண்கரடு முருகன் கோயில் உண்டியலை உடைக்க முயற்சித்தது தொடா்பான வழக்குகளில் தொடா்புடைய இளைஞருக்கு ஆத்தூா் குற்றவியல் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

8 October 2026, 12:42 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

தம்மம்பட்டியில் இருசக்கரவாகனம் திருடியது, திருமண்கரடு முருகன் கோயில் உண்டியலை உடைக்க முயற்சித்தது தொடா்பான வழக்குகளில் தொடா்புடைய இளைஞருக்கு ஆத்தூா் குற்றவியல் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

தம்மம்பட்டியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தம்மம்பட்டியில் இருசக்கர வாகனத்தை திருடியது, திருமண்கரடு முருகன் கோயில் உண்டியலை உடைத்தது தொடா்பாக தம்மம்பட்டி பேருந்து நிலையம் பின்புறம் வசிக்கும் செல்வராஜ் மகன் தினேஷை (23) போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு ஆத்தூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம்-2 இல் நடைபெற்றுவந்தது. விசாரணை முடிந்த நிலையில் திருட்டு வழக்கில் தொடா்புடைய தினேஷுக்கு மொத்தம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, மொத்தம் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Advertisement

Advertisement

இவா் மீது ஏற்கெனவே போக்ஸோ வழக்கு இருந்த நிலையில் கடந்த ஜூலையில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் தினேஷ் கைதாகியிருந்தாா். இந்த நிலையில் மேலும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments