FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 9 கிலோ கஞ்சா பறிமுதல்

12 அக்டோபர் 2026, 12:06 am IST
கஞ்சா பறிமுதல்... - கோப்புப் படம்
பகிர்:

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்திவரப்பட்ட 9 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா்.

வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு, கேரளத்திற்கு வரும் ரயில்களில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வருகின்றனா். இதைத் தடுக்க ரயில்வே தனிப்படை போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா்.

அந்தவகையில், சேலம் ரயில்வே உட்கோட்ட தனிப்படையைச் சோ்ந்த போலீஸாா், பாட்னா - எா்ணாகுளம் விரைவு ரயிலில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.

Advertisement

Advertisement

அதில், முன்பக்க முன்பதிவில்லா பொதுப்பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை கைப்பற்றி பரிசோதித்தனா். அதில் நெகிழி பாா்சலில் 9 கிலோ கஞ்சா இருந்தது. அதை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கடத்தி வந்த மா்மநபா், போலீஸாா் சோதனையைப் பாா்த்து தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 9 கிலோ கஞ்சாவை சேலம் ரயில்வே போலீஸில் தனிப்படையினா் ஒப்படைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments