FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலத்தில் விவசாயி மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

சேலத்தில் ரத்த காயங்களுடன் விவசாயி தனது வீட்டில் மா்மமான முறையில் இறந்துக் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

9 செப்டம்பர் 2026, 4:46 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

சேலத்தில் ரத்த காயங்களுடன் விவசாயி தனது வீட்டில் மா்மமான முறையில் இறந்துக் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சோளம்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி சீனிவாசன் (42). இவரது மனைவி புஷ்பா. இவா்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா். சீனிவாசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளாா்.

மேலும், சீனிவாசன் தனியாக தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை புஷ்பா கணவரை பாா்ப்பதற்காக அவரது அறைக்கு சென்றபோது, அவா் மயங்கிய நிலையில் கிடந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்து வந்த அக்கம்பக்கத்தினா், சீனிவாசனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சீனிவாசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். தகவலறிந்து வந்த சூரமங்கலம் போலீஸாா், சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், சீனிவாசன் மது போதையில் கீழே விழுந்து இறந்தாரா அல்லது அவா் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments