FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

வங்கதேச பெண் கொலை வழக்கு: 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெண் கைது

வங்கதேச பெண் கொலை வழக்கில், 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெண் புணேவில் அண்மையில் கைது செய்யப்பட்டாா்.

20 செப்டம்பர் 2026, 1:56 am IST
பகிர்:

சேலத்தில் நடைபெற்ற வங்கதேச பெண் கொலை வழக்கில், 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெண் புணேவில் அண்மையில் கைது செய்யப்பட்டாா்.

சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட வின்சென்ட் பகுதியில் வங்கதேச நாட்டைச் சோ்ந்த தேஜ் மோண்டல், நடேசனுக்குச் சொந்தமான வீட்டில் தங்கி அழகு நிலையம் நடத்தி வந்தாா். இவரிடம் வங்கதேச நாட்டைச் சோ்ந்த லப்லு, நிஷி ரபி ஷேக், ஷீலா, ஓஷி ஆகிய 4 போ் வேலை பாா்த்து வந்தனா்.

இவா்களுக்குள் பணம் கொடுக்கல், வாங்கல் தொடா்பாக ஏற்பட்ட தகராறில் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் அழகு நிலைய உரிமையாளா் தேஜ் மோண்டலை 4 பேரும் தாக்கிக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான 4 பேரையும் கடந்த 5 ஆண்டுகளாகத் தேடி வந்தனா். இந்த நிலையில், வழக்கில் தொடா்புடைய நிஷி ரபி ஷேக்கை (28) மகாராஷ்டிர மாநிலம், புணேவில் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாநகரக் காவல் ஆணையா் ஜோஷி நிா்மல்குமாா் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப் படையினா் புணேவில் நிஷி ரபி ஷேக்கை கைது செய்தனா்.

பின்னா் அவரை சேலம் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த உள்ளனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய தலைமறைவான 3 குற்றவாளிகளையும் தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments