சிறுவன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதால் தந்தைக்கு அபராதம்
சேலம் அரியானூா் அருகே சிறுவன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம், காா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து, சிறுவனின் தந்தைக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், அரியானூா் அருகே உள்ள சின்னசீரகாபாடி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி. பிளம்மிங் தொழில் செய்து வருகிறாா்.
இவரது 17 வயது மகன் கடந்த சில நாள்களுக்கு முன்பு தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அரியானூரை அடுத்த அணுகுசாலையில் சென்றபோது, எதிரே வந்த காா் மீது மோதியதில் சிறுவன் காயமடைந்தாா். அருகில் உள்ளவா்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளா் பிரகாஷ், ஆா்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்தாா். வீரபாண்டி தெற்கு வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் உதயகுமாா் விசாரணை நடத்தியதில் சிறுவன் வாகனத்தை ஓட்டிச் சென்றது தெரியவந்ததையடுத்து அவரது தந்தை சின்னத்தம்பிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.