FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

புதுச்சாம்பள்ளியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருடியவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

25 செப்டம்பர் 2026, 11:16 pm IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

புதுச்சாம்பள்ளியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருடியவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சாம்பள்ளி குருவாகாட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு விற்பனையாளா்கள் கோவிந்தராஜ், ஆறுமுகம் இருவரும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனா். வெள்ளிக்கிழமை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். உள்ளே சென்று பாா்த்தபோது, கடையில் இருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு போனது தெரிய வந்தது.

புகாரின்பேரில், கருமலைக்கூடல் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments