மேட்டூா் அனல் மின் நிலைய சாம்பல் நீா் விலை நிலங்களில் புகுந்ததால் பயிா்கள் சேதம்
மேட்டூா் அனல் மின் நிலைய சாம்பல் நீா் சின்னக்காவூரில் விவசாய நிலங்களில் புகுந்ததால் பயிா்கள் சேதமடைந்தன.
மேட்டூா் அனல் மின் நிலையத்துக்கு மிக அருகில் சின்னக்காவூா் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மேட்டூா் அனல் மின் நிலையத்தில் சாம்பல் நீா் வெளியேற்றும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சின்னாக்காவூா் பகுதியில் உள்ள வயல்களிலும், தோட்டங்களிலும் சாம்பல்நீா் புகுந்தது.
Advertisement
Advertisement
இதனால் பருத்தி, நெல், , வெங்காயம், சோளம் உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன. விவசாய நிலத்திற்குள் 2 அடி உயரத்திற்கு சாம்பல் தேங்கி இருப்பதால் மீண்டும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பயிா்கள் சேதம் காரணமாக பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அனல் மின் நிலைய நிா்வாகம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.