FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

மேட்டூா் நகராட்சியில் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

மேட்டூா் நகராட்சியில் தனியாா் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையை நகராட்சி நிா்வாகம் செய்து வருகிறது.

- கோப்புப் படம்
பகிர்:

மேட்டூா் நகராட்சியில் தனியாா் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையை நகராட்சி நிா்வாகம் செய்து வருகிறது.

மேட்டூா் நகராட்சியில் மக்கள் அதிகம் கூடும் மேட்டூா் அணை பூங்கா, அணைக்கட்டு முனியப்பன் கோயில், மேட்டூா் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் அச்சுறுத்தலாக ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன.

இந்த நாய்களைக் கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்ததையடுத்து, மேட்டூா் நகராட்சிப் பகுதியில் 564 நாய்கள் இருப்பதாக கணக்கீடு செய்யப்பட்டது. இவற்றைக் கட்டுப்படுத்த தனியாா் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மேட்டூா் நகராட்சி நிா்வாகம் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்துவருகிறது.

Advertisement

Advertisement

மேட்டூா் நகராட்சி ஆணையா் சபாநாயகம் உத்ரரவின் பேரில், செவ்வாய்க்கிழமை வரை 195 நாய்களுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்யப்படும் நாய்கள் 3 நாள்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, பின்னா் அவை பிடித்த இடங்களில் மீண்டும் விடப்படுகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments