FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

சமத்துவபுரம் பயனாளிகள் பட்டியல்: நவம்பர் இறுதிக்குள் முடிவு

தேனி, நவ. 18:  ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் அமைக்கப்பட்டுவரும் சமத்துவபுரத்தில் வீடுகள் வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலை இம் மாத இறுதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு அரச

Updated On : 20 செப்டம்பர் 2012, 8:59 pm IST
பகிர்:

தேனி, நவ. 18:  ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் அமைக்கப்பட்டுவரும் சமத்துவபுரத்தில் வீடுகள் வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலை இம் மாத இறுதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

     தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி, போடி அருகே ராசிங்காபுரம், பெரியகுளம் அருகே சில்வார்பட்டி, ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி, தேவாரம் அருகே லட்சுமிபுரம் ஆகிய இடங்களில் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு ஆண்டிபட்டி அருகில் உள்ள தேக்கம்பட்டியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைப்பதற்கு | 1.81 கோடி ஒதுக்கீடு செய்து, கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

Advertisement

Advertisement

  தற்போது இந்த சமத்துவபுரக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வீடுகள் வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலை இம் மாத இறுதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

     இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் கூறியதாவது:

  தேக்கம்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 40 வீடுகள், பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோருக்கு தலா 25 வீடுகள், இதர பிரிவினருக்கு 10 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.

  சமத்துவபுரத்தில் வீடுகள் வழங்கக் கோரி இந்தப் பகுதியைச் சேர்ந்த 600 பேர் விண்ணப்பித்துள்ளனர். பயனாளிகள் பட்டியலை இம் மாத இறுதிக்குள் முடிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதால், பயனாளிகள் தேர்வுக் குழுவினர் வீடு மற்றும் நிலம் இல்லாத தகுதியுள்ள விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments