கமுதி பெருமாள் கோயிலில் 3-வது புரட்டாசி சனி உற்சவம்
கமுதி, அக். 8: கமுதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி 3-வது சனி வார உற்சவம் நடைபெற்றது. ஆலய நிர்வாக டிரஸ்டி ஆர்.முனியாண்டி செட்டியார் தலைமையும், டிரஸ்டிகள் பி.ஜி.மார்க்
கமுதி, அக். 8: கமுதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி 3-வது சனி வார உற்சவம் நடைபெற்றது.
ஆலய நிர்வாக டிரஸ்டி ஆர்.முனியாண்டி செட்டியார் தலைமையும், டிரஸ்டிகள் பி.ஜி.மார்க்கண்டேயன் செட்டியார், பி.ராமையா , ஆர்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.
என்.ஆர்.எம்.எஸ். வகையறா மண்டகப்படி உபயதாரர்கள் சார்பில் சுவாமி-அம் பாள்களுக்கு அபிஷேகங்கள் செய்து, சிறப்பு மலர் அலங்கார, தீப ஆராதனை பூஜைகளை அர்ச்சகர் உ.ரமணீதர சர்மா குருக்கள் நடத்தினார்.
Advertisement
Advertisement
உற்சவத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசி உள்பட பிரமுகர்கள், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.