டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட மாநாடு
திண்டுக்கல், அக். 8: டாஸ்மாக் ஊழியர்கள் சங்க திண்டுக்கல் மாவட்ட 4-வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை, கிழக்கு ஆரோக்கிய மாதா தெரு வி.பி.சிந்தன் நினைவகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு, டாஸ்மாக் மாவட்டத் தல
திண்டுக்கல், அக். 8: டாஸ்மாக் ஊழியர்கள் சங்க திண்டுக்கல் மாவட்ட 4-வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை, கிழக்கு ஆரோக்கிய மாதா தெரு வி.பி.சிந்தன் நினைவகத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்கு, டாஸ்மாக் மாவட்டத் தலைவர் கே. மகாமுனி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் கே. ஆறுமுக நயினார், மாவட்டச் செயலர் கே.ஆர். கணேசன், பொருளாளர் கே. முத்துராஜ், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலர் பி. ஆசாத், சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஏ. பிச்சைமுத்து, கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்டப் பொதுச் செயலர் மு. சாதிக்அலி, மத்திய மின் ஊழியர் சங்க மாவட்டப் பொதுச் செயலர் ஜெயசீலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலர் பி. ராமு வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்டப் பொருளாளர் மா. கோபால் வரவு-செலவு அறிக்கைத் தாக்கல் செய்தார். மாநில துணைப் பொதுச் செயலர் கே. திருச்செல்வம் நிறைவுரை ஆற்றினார்.
Advertisement
Advertisement
8 ஆண்டுகளாகப் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி நியமன ஆணைப்படி சுழற்சி முறையில் பணிமாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
பழனி தாலுகா பொருளாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.