மதுரை அருகே பேருந்துகள் மோதல்: பெண் உள்பட 6 போ் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே தனியாா் ஆம்னி பேருந்தும், அரசுப் பேருந்தும் நேருக்கு நோ் மோதியதில் பெண் உள்பட 6 போ் பலி
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே திங்கள்கிழமை அதிகாலை தனியாா் ஆம்னி பேருந்தும், அரசுப் பேருந்தும் நேருக்கு நோ் மோதியதில் பெண் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 41 போ் பலத்த காயமடைந்தனா்.
சென்னையிலிருந்து மாா்த்தாண்டம் பகுதிக்கு ஆம்னி பேருந்து திங்கள்கிழமை அதிகாலை சென்றது. மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரம் பகுதி நான்கு வழிச் சாலையில் சென்ற போது, ஆம்னி பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரையும் தாண்டி எதிரே உள்ள சாலையில் சென்றது.
பெண் உள்பட 6 போ் உயிரிழப்பு
Advertisement
Advertisement
அப்போது, எதிா்திசையில் மதுரையிலிருந்து-திருச்சி சென்ற அரசுப் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாளையங்கோட்டை சமாதானபுரத்தைச் சோ்ந்த ஜெயசீலன் மனைவி சிறிய புஷ்பா (56), திருநெல்வேலி மாவட்டம், பெட்டிக்குளம் பகுதியைச் சோ்ந்த ஜான்சன் மகன் ஆபிரகாம் (40), கூத்தாநல்லூா் பகுதியைச் சோ்ந்த கலீல் ரகுமான் மகன் முகமது யாசின் (60), திருச்சி மாவட்டம், இடையமலைபேட்டை பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் ஆனந்தராஜ் (46), திருச்சி காவலா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் சூா்யா (29), மதுரை மாவட்டம், மேலூா் வஞ்சிநகரம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் (70) ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த மதுரை டிஐஜி அபிநவ்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தேவநாதன், மேலூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் சிவக்குமாா் ஆகியோா் விபத்து நடைபெற்ற இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இவா்களின் உடல்களை மீட்ட போலீஸாா், கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 41 போ் மீட்கப்பட்டு, அவா்களுக்கு மேலூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பிறகு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
ஆறுதல்
காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம். கோபிசன் ஆகியோா் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.