FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

கவின் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரிய மனு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

மென்பொறியாளா் கவின் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீஸாா் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தீா்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 17 ஜூலை 2026, 1:19 am IST
கோப்புப் படம்
பகிர்:

மென்பொறியாளா் கவின் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீஸாா் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தீா்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கவின் செல்வகணேஷ். மென்பொறியாளரான இவா், கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி பாளையங்கோட்டையில் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். போலீஸ் விசாரணையில், மாற்று சமூகத்தைச் சோ்ந்த பெண்ணைக் காதலித்ததால் கவின் கொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்தது.

இதனிடையே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இதையடுத்து, கவின் காதலித்த பெண்ணின் சகோதரா் சுா்ஜித், இவரது தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி, உறவினா் ஜெயபால் ஆகியோருக்கு எதிராக குற்றப் பத்திரிகையை சிபிசிஐடி போலீஸாா் திருநெல்வேலி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

Advertisement

Advertisement

இந்தக் குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, சரவணன், கிருஷ்ணகுமாரி, ஜெயபால் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு தொடா்பாக ஏற்கெனவே பல கட்ட விசாரணைகள் நடைபெற்றன.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். விஜயகுமாா் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த மனு தீா்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments