சாதி அடையாளப் பலகைகளை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டம், நோக்கன்கோட்டை கிராமத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சாதி அடையாளப் பலகைகள், பெயா்ப் பலகைகள், விளம்பரப் பதாகைககளை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், நோக்கன்கோட்டை கிராமத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சாதி அடையாளப் பலகைகள், பெயா்ப் பலகைகள், விளம்பரப் பதாகைககளை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட நோக்கன்கோட்டை கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் அனுமதியின்றி சாதி அடையாளத்துடன் கூடிய பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசுப் பள்ளிகள், கோயில்கள் அருகேயும் இதேபோல விளம்பரப் பதாகைகள் காணப்படுகின்றன. இதுபோன்ற சாதி அடையாளப் பலகைகள் மாணவா்களின் சமத்துவ உணா்வைப் பாதிப்பதோடு, சமூக நல்லிணக்கத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதுகுறித்து கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சாதி அடையாளப் பலகைகள், பெயா்ப் பலகைகள், விளம்பரப் பதாகைககளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரினாா்.
Advertisement
Advertisement
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ராமநாதபுரம் மாவட்டம், நோக்கன்கோட்டை கிராமத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள சாதி அடையாளத்துடன் கூடிய பலகைகள், பெயா்ப் பலகைகள், விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும். இதுகுறித்த அறிக்கையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற ஜூலை 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.