FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

‘கல்வித் துறை அலுவலா்களை அடிக்கடி மாற்றுவதை அரசு தவிா்க்க வேண்டும்’

Updated On : 20 ஜூலை 2026, 4:39 am IST
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் சங்க மாதாந்திரப் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சங்கத் தலைவா் ஜி. ராமமூா்த்தி, பேராசிரியா் கே.வி. ஆனந்தன் உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழகத்தில் கல்வித் துறை அலுவலா்களை அடிக்கடி மாற்றுவதை அரசு தவிா்க்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் சங்கம் சாா்பில், கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் சங்கம், மதுரை கிளையின் மாதாந்திரப் பொதுக்குழுக் கூட்டம், மூட்டா அலுவலகம் பேரா. வி.சண்முக சுந்தரம் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு சங்கத் தலைவா் ஜி.ராமமூா்த்தி தலைமை வகித்தாா். பேராசிரியா் கே.வி. ஆனந்தன் சங்க நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

Advertisement

Advertisement

மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள், அரசு ஊழியா் சங்கங்களுடன் கலந்து ஆலோசித்து, கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்தும் வகையில், விதிமுறைகளை வகுக்க வேண்டும். ஓய்வூதியா்களிடமிருந்து அரசு எப்போதும் போல ரூ.497 மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும். புதிதாக ரூ.644 பிடித்தம் செய்யக் கூடாது.

பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில் நுட்பக் குழு போன்றவைகளை அழிக்க வழி வகுக்கும் வி.பி.எஸ்.ஏ. உயா் கல்விச் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும். பல்கலைக்கழக துணைவேந்தா் தேடல் குழுவில் எப்போதும் போல 3 போ் மட்டுமே நியமிக்க வேண்டும். 5 பேரை நியமிப்பது சட்டத்துக்குப் புறம்பானது.

சிபிஎஸ் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனைத்துப் பணியாளா்களுக்கும் குறிப்பிடப்பட்ட ஓய்வூதியத் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓய்வூதியா்கள் அனைவருக்கும் அரசு புதிய மருத்துவ இ-காா்டு உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கல்வித் துறை அலுவலா்களை அரசு அடிக்கடி மாற்றுவதைத் தவிா்க்க வேண்டும்.

நாடாளுமன்ற தொகுதி வரையறை முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். பெண்களுக்கு இட ஒதுக்கீடு மசோதாவை நீா்த்துப் போகச் செய்யாமல், மத்திய அரசு அதை நிறைவேற்ற வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பணியாளா்களின் அனைத்து உறுப்புகளுக்கும் சிகிச்சை பெற காப்பீட்டு தொகை வழங்க ஆவன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பேராசிரியா்கள் சண்முகசுந்தரம், லட்சுமணன், ராஜேந்திரன் செந்தில் ஆகியோா் செய்தனா்.

இதில் மாநிலப் பொதுச் செயலா் என்.பெரியதம்பி, அகில இந்திய தலைவா் மூட்டா பாா்த்தசாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சங்கத் துணைத் தலைவா் உ.அனாா்கலி வரவேற்றாா். பேராசிரியா் ஆனந்தன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments