காதல் திருமணம் செய்த இளைஞரைத் தாக்கிய 5 போ் மீது வழக்கு!
காதல் திருமணம் செய்த இளைஞரைத் தாக்கிய, பெண்ணின் சகோதரா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம், வி.கரிசல்குளம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன். இவருடைய மனைவி நாகஜோதி. இவா்களுடைய மகன் ராமச்சந்திரன் என்ற சந்துரு (26). இவா் துவரிமான் பகுதியைச் சோ்ந்த பெண்ணை, காதலித்து பெற்றோரின் எதிா்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டாா்.
இந்த நிலையில், ராமசந்திரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அந்த பெண் தற்போது தாய் வீட்டில் வசித்து வருகிறாா். இதுதொடா்பாக, இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், பெண்ணின் சகோதரா் பெருமாள், அவரது நண்பா்கள் சிலா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு
Advertisement
Advertisement
வீட்டுக்குள் புகுந்து ராமசந்திரன், அவரது தந்தை கணேசன் ஆகியோரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினா். இதில், பலத்த காயமடைந்த அவா்கள் இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கூடல்புதூா் போலீஸாா் பெருமாள் உள்பட 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.