திண்டுக்கல் அருகே மண் சரிந்து விழுந்து இளைஞர் சாவு
திண்டுக்கல் அருகே வியாழக்கிழமை இரவு மணல் கடத்தச் சென்றபோது, மண் சரிந்து விழுந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் இளைஞர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் அருகே வியாழக்கிழமை இரவு மணல் கடத்தச் சென்றபோது, மண் சரிந்து விழுந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் இளைஞர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள கண்ணமனூரைச் சேர்ந்தவர் தர்மராஜ் (32). இவர், அதே பகுதியைச் சேர்ந்த முருகப்பெருமாள், ஆவிளிப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் உள்ளிட்ட 4 பேருடன், அப்பகுதியில் உள்ள சந்தனவர்த்தினி ஆற்றில் டிராக்டர் மூலம் மணல் கடத்துவதற்காக வியாழக்கிழமை இரவு சென்றுள்ளார்.
மணல் அள்ளிக் கொண்டிருந்தபோது, மேல் மணல் சரிந்துள்ளது. இதில், தர்மராஜ் உள்ளிட்ட 3 பேர் மண்ணில் புதைந்துள்ளனர். இது குறித்து, திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படையினர், இயந்திர உதவியுடன் மணலை அகற்றி, புதையுண்டவர்களை மீட்டனர். அப்போது, தர்மராஜ் மூச்சுத் திணறி உயிரிழந்திருந்தார். காயமடைந்த முருகப்பெருமாள் மற்றும் நாகராஜ் ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement
இது குறித்து, டிராக்டர் உரிமையாளரான கனகராஜ் மீது சாணார்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.