FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பழனி அருகே குடிசை வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

பழனியை அடுத்த சாமிநாதபுரம் அமராவதி ஆற்றின் கரையோரத்தில் உள்ள குடிசை வீடுகளில் புதன்கிழமை இரவு தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

பழனியை அடுத்த சாமிநாதபுரம் அமராவதி ஆற்றின் கரையோரத்தில் உள்ள குடிசை வீடுகளில் புதன்கிழமை இரவு தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
  கேரளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகாவுக்கு உட்பட்ட அமராவதி,  திருமூர்த்தி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அமராவதி அணை முழு கொள்ளளவான 90 அடியில் 88 அடிக்கு மேல் நிறைந்ததைத் தொடர்ந்து அணையின் மதகுகள் திறக்கப்பட்டு  விநாடிக்கு 10 ஆயிகம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 
இந்த தண்ணீர் கொழுமம், சாமிநாதபுரம் வழியாக தாராபுரம் சென்று பின்னர் காவிரியை அடைகிறது. இதனால் திண்டுக்கல் மாவட்டம் சாமிநாதபுரம் பகுதியில் வருவாய்த்துறை சார்பில் புதன்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  மேலும் தண்டோரா மூலமும் அறிவிக்கப்பட்டது. 
இந்நிலையில் புதன்கிழமை இரவு  சாமிநாதபுரம் அமராவதி ஆற்றின் கரையோரங்களில் உள்ள சில குடிசை வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் இரவு முழுவதும் நீரை வெளியேற்ற முடியாமல் குளிரில் அவதிப்பட்டனர். 
மேலும் அமராவதி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வியாழக்கிழமை விடுமுறை விடப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments