FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பழனியில் சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தப்படும்ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பு

பழனியில் பள்ளி நேரங்களில் சாலையின் இருபுறமும் நிற்கும் ஆட்டோக்களால் சிக்கித் திணறும் நிலையை மாற்ற போக்குவரத்துக்காவல்

Updated On : 7 ஜூன் 2018, 5:40 am IST
பகிர்:

பழனியில் பள்ளி நேரங்களில் சாலையின் இருபுறமும் நிற்கும் ஆட்டோக்களால் சிக்கித் திணறும் நிலையை மாற்ற போக்குவரத்துக்காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     பழனி ரெணகாளியம்மன் நால்ரோட்டில் இருந்து மின்வாரியம் நால்ரோடு வரையிலுமான கான்வென்ட் சாலையில் இருபுறமும் வணிக வளாகங்கள், வங்கி, பள்ளிகள் உள்ளன.  இந்தச் சாலையில் காலையில் எட்டு மணி முதல் ஒன்பது மணி வரையிலும், மாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரையிலுமான நேரங்களில் பள்ளிக்கு மாணவர்கள் வருவதும் செல்வதுமாக உள்ளனர்.  இந்நிலையில் மாணவர்களை ஏற்றிச் செல்ல சாலையின் இருபுறமும் ஆட்டோக்கள் வரிசை கட்டி நிறுத்தப்படுகிறது. 
 இந்நிலையில் வணிக வளாகங்களின் முன்புறமும் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.  இந்த நேரத்தில் ஏதாவது கனரக வாகனங்கள் வரும் பட்சத்தில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு கடும் நெரிசல் ஏற்படுகிறது.  இந்தச் சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றக் கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 குறைந்த பட்சம் காலை, மாலை நேரத்திலாவது போக்குவரத்து போலீஸார் அங்கு போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.  காவல்துறையில் பற்றாக்குறை உள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். எனவே தன்னார்வலர்களின் உதவியுடன் போக்குவரத்தை மாற்றிவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments