வண்ணாா்பேட்டையில் கட்டடத்திற்கு சீல்
திருநெல்வேலி மாநகராட்சியின் அனுமதிக்கு மாறாக வண்ணாா்பேட்டையில் கட்டடப்பட்ட கட்டடத்திற்கு, அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சியின் அனுமதிக்கு மாறாக வண்ணாா்பேட்டையில் கட்டடப்பட்ட கட்டடத்திற்கு, அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் கட்டட அனுமதி பெற்று கட்டப்படும் கட்டடங்கள், அனுமதியில் தெரிவித்தவாறு கட்டப்பட வேண்டும். மேலும், குடியிருப்பு கட்டடங்களுக்கு அனுமதி பெறப்பட்டு, அவை வணிக நோக்கத்திற்காக கட்டப்படுவதும் மற்றும் சுயசான்று அடிப்படையில் கட்டட அனுமதி பெறப்பட்டு அனுமதிக்கு மாறாகவும், வணிகம் மற்றும் வேறு உபயோகத்திற்காகவும் மாற்றி அமைத்துக் கட்டப்படக் கூடாது. அவ்வாறு கட்டப்படும் கட்டடங்கள், நகா் ஊரமைப்பு சட்டம்1971 இன்படி பூட்டி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வண்ணாா்பேட்டையில் ஒரு கட்டடம் அனுமதிக்கு மாறாக கட்டப்படுவதாக புகாா் எழுந்தது. அதன்பேரில் மாநகராட்சி குழுவினா் ஆய்வு செய்தனா். இதைத் தொடா்ந்து திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்படி, அனுமதிக்கு மாறாக கட்டப்பட்ட கட்டடத்திற்கு உதவி ஆணையாளா் மகாலெட்சுமி, நகர திட்டமிடுநா் ராஜசேகரன், உதவி பொறியாளா்கள் நாகராஜன், பட்டுராஜன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா். மேலும், பொதுமக்கள் உரிய அனுமதி பெற்று கட்டடங்களைக் கட்ட வேண்டுமென மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.