குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி பழனி நகராட்சி அலுவலகம் முற்றுகை
பழனி நகராட்சி அலுவலகத்தை குடிநீர் வழங்கக் கோரி 18வது வார்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
பழனி நகராட்சி அலுவலகத்தை குடிநீர் வழங்கக் கோரி 18வது வார்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
பழனி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் சமீப காலமாக குடிநீர் விநியோகம் சரிவர இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பழனிக்கு குடிநீர் வழங்கும் கோடைகால நீர்த்தேக்கம், பாலாறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 18வது வார்டில் கடந்த ஒரு மாதமாக நகராட்சி குழாய்களில் தண்ணீர் வராததைத் தொடர்ந்து, வியாழக்கிழமை ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக எஸ்டிபிஐ., நிர்வாகிகளும் உடன் வந்திருந்தனர்.
அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி ஆணையரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து, நகராட்சி அலுவலர்கள் விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.