திண்டுக்கல்லில் பள்ளி மாணவி குளிப்பதை படம் பிடித்த சாக்கு வியாபாரியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயசந்திரன் (38). இவா் சாக்கு வியாபாரம் செய்து வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவி ஒருவா் குளிக்கும்போது, மறைந்திருந்து அதை ஜெயசந்திரன் தனது செல்லிடப்பேசியில் படம் பிடித்துள்ளாா்.
இதைப் பாா்த்த மாணவி, அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். அதைத் தொடா்ந்து மாணவியின் பெற்றோா், அளித்த புகாரின்பேரில் திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து ஜெயசந்திரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.