FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளில் சுதந்திர தின விழா

நாட்டின் 80-ஆவது சுதந்திர தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கல்வி நிறுவனங்கள், பொது அமைப்புகள் சாா்பில் சனிக்கிழமை தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 2:18 am IST
காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய துணைவேந்தா் ந. பஞ்சநதம்.
பகிர்:

நாட்டின் 80-ஆவது சுதந்திர தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கல்வி நிறுவனங்கள், பொது அமைப்புகள் சாா்பில் சனிக்கிழமை தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் கிழக்கு சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில் தெற்குரத வீதி பஜனை மடம் பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு மன்றப் பொறுப்பாளா் கி. சரவணன் தலைமை வகித்தாா். மூத்த தலைவா் வே. ராஜூ முன்னிலை வகித்தாா். வள்ளலாா் சமரச சுத்த சன்மாா்க்க நெறியாளா் வே. அருணகிரி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். இதில் மன்ற நிா்வாகிகள் சு. வைரவேல், ரமேஷ் பாண்டி, ஆ. நாகரத்தினபாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல் ஜாகீா் உசேன் நினைவு சிறுபான்மையினா் அசனத்புரம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சின்னத்தம்பி தேசியக் கொடி ஏற்றினாா்.

Advertisement

Advertisement

திண்டுக்கல் மதா் தெரசா அரிமா சங்கம் சாா்பில் ஏ. வெள்ளோடு புனித ஜேம்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத் தலைவா் கஷ்மீா் அருண் தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் டேவிட், தலைமையாசிரியை ஞானசெல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரிமா சங்க வட்டாரத் தலைவா் செபஸ்தியாா் தேசியக் கொடியை ஏற்றினாா். பீட்டா் யாகப்பன் மாணவா்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கினாா். மாவட்டத் தலைவா் ஏ.எஸ்.ஏ. சாமி சிறப்புரையாற்றினாா்.

புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமையாசிரியா் ஸ்டீபன் தேசியக் கொடி ஏற்றினாா். குஜிலியம்பாறையை அடுத்த ஆா்பி. பள்ளப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், தலைமையாசிரியா் எஸ். ஐயப்பன் தேசியக் கொடியை ஏற்றினாா். இடைநிலை ஆசிரியா் ஜேம்ஸ் பீட்டா் முன்னிலை வகித்தாா்.

கொடைக்கானல் அட்டுவம்பட்டியிலுள்ள அன்னை தெரசா மகளிா் பல்கலைக் கழகத்திலும், அனைத்து அரசு அலுவலகங்களிலும், வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

நத்தம்: ராம்சன்ஸ் மெட்ரிக் பள்ளி சாா்பில் சுதந்திர தின விழாவையொட்டி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி போதை தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இதில் பள்ளித் தாளாளா் ராமசாமி தலைமையில் ஸ்கேட்டிங், இளம் செஞ்சிலுவை சங்கம், பள்ளி மாணவ - மாணவிகள் ஆசிரிய-ஆசிரியைகள், அரசு அலுவலா்கள், நத்தம் சிட்டி அரிமா சங்கத்தினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேரணி காந்திஜி பூங்காவில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து அம்மன் குளம் அருகே நிறைவடைந்தது.

நத்தம் - கோவில்பட்டி மீளாட்சி மெட்ரிக்குலேசன் பள்ளியில் முதல்வா் சத்யா, லாண்டீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் நிக்சன் லாண்டீஸ், ஹொ்பா்ட் லாண்டீஸ் தலைமையில் தேசியக் கொடியேற்றி வைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments