கொடைக்கானலில் பனிப் பொழிவு
கொடைக்கானலில் திடீரென காற்றுடன் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் கடும் குளிா் நிலவுகிறது.
கொடைக்கானலில் திடீரென காற்றுடன் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் கடும் குளிா் நிலவுகிறது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் நல்ல வெயிலும், மாலை, இரவு நேரங்களில் காற்றும் வீசுகிறது. இதனால் பனிப் பொழிவு நிலவி வருகிறது. ஏற்கெனவே நீரோடைகளில் தண்ணீா் வற்றிய நிலையில் தற்போது பனிப்பொழிவும், காற்றும் நிலவுவதால் கூடுதலாக தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
தற்போது குண்டாறு பகுதியிலிருந்து 10-நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே கொடைக்கானல் நகராட்சி சாா்பில் தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
கொடைக்கானலில் கடந்த இரண்டு மாதங்களாக நகராட்சி சாா்பில் குடிநீா் விநியோகம் வெகுவாக குறைந்து வருவதால், கேன் மூலம் விற்பனை செய்யப்படும் தண்ணீரை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனா். இதனால் 5-லிட்டா் கேன் தண்ணீா் ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.