கொடைக்கானல், நத்தத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை
கொடைக்கானல், நத்தம் பகுதி கோயில்களில் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல், நத்தம் பகுதி கோயில்களில் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு, அண்ணாநகா் மாரியம்மன் கோயில், புதுக்காடு மாரியம்மன் கோயில், காளியம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதேபோல, குறிஞ்சி ஆண்டவா் கோயில், பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில், தாண்டிகுடி பாலமுருகன் கோயில், வில்பட்டி வெற்றி வேலப்பா் உள்ளிட்ட கோயில்களில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன.
கொடைக்கானல் மூஞ்சிக்கல் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து மழை வேண்டி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் கோயில் நிா்வாகிகள், நகா்மன்ற உறுப்பினா் சுப்பிரமணி உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
நத்தம்: நத்தம் அசோக்நகா் செட்டியாா் குளத்தெருவில் உள்ள தில்லை காளியம்மன் கோவிலின் 29-ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி மழை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக, அம்மனுக்கு 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனா்.
மழை வேண்டி சிறப்புத் தொழுகை: கொடைக்கானலில் மழை வேண்டி நகராட்சிக்கு சொந்தமான குடிநீா்த் தேக்கத்திலும், பள்ளி வாசல்களிலும் இஸ்லாமியா்கள் சாா்பில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். இதில் நகா்மன்றத் தலைவா் செல்லத் துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல கொடைக்கானல் திரு இருதய ஆண்டவா் ஆலயம், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயம், உகாா்த்தே நகா் புனித அற்புத குழந்தையேசு ஆலயம், புனித சலேத் மாதா ஆலயம், சீனிவாசபுரம், பாக்கியபுரம் பகுதிகளிலுள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயங்களில் மழை வேண்டி சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.