இடையக்கோட்டை பகுதியில் கோழிகளுக்கு நோய் பாதிப்பு
இடையக்கோட்டை பகுதிகளில் நாட்டுக் கோழிகள் தொடா்ந்து நோயினால் பாதிக்கப்படுவது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், இடையக்கோட்டை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளிலும், தோட்டங்களிலும் விவசாயிகள் நாட்டுக் கோழி வளா்ப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் இடையக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. இதன் எதிரொலியாக அந்தப் பகுதியில் வளா்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்து வருகின்றன. இதே போல, காக்கைகளும் உயிரிழந்து வருவதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
Advertisement
Advertisement
கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக இடைக்கோட்டை பகுதியில் முகாமிட்டு நோய் பாதிப்புக்கான காரணங்களைக் கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.