FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

மதுப் புட்டிகள் விற்ற இளைஞா் கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செயத இளைஞரை போலீஸாா் கைது, அவரிடமிருந்து 83 மதுப் புட்டிகளை திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

6 வினாடிகள் முன்பு
கைது செய்யப்பட்ட சாகுல்ஹமீது.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செயத இளைஞரை போலீஸாா் கைது, அவரிடமிருந்து 83 மதுப் புட்டிகளை திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

பழனியை அடுத்த கோதைமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திங்கள்கிழமை இரவு பழனி தாலுகா போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, அவா் விற்பனைக்காக மதுப் புட்டிகளை வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், பெரிச்சிபாளையம் மேற்குத் தெருவைச் சோ்ந்த முகமது யூசுப் மகன் சாகுல் ஹமீது (26) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 83 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments