பழனி அடிவார கிரிவீதியில் இலவச மின்கல வாகனத்தில் திடீா் தீ விபத்து
பழனி அடிவாரம் கிரிவலப் பாதையில் பக்தா்கள் பயணிக்க உதவும் இலவச மின்கல வாகனம் திங்கள்கிழமை மாலை திடீரென தீப்பிடித்தது. இதில் யாரும் பயணிக்காததால் விபத்து தவிா்க்கப்பட்டது.
பழனி அடிவாரம் கிரிவலப் பாதையில் பக்தா்கள் பயணிக்கும் வகையில், ரோப் காா், வின்ச், படிவழிப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்ல 35-க்கும் மேற்பட்ட இலவச மின்கல வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த வாகனங்கள், குடமுழுக்கு நினைவரங்கம் அருகே நிறுத்தி மின்னோட்டம் செய்யப்பட்டு இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை கிரிவலப் பாதை குடமுழுக்கு நினைவரங்கம் அருகே வந்து கொண்டிருந்த மின்கல வாகனத்தில் ஓட்டுநரின் இருக்கைக்கு கீழே இருந்த மின்கலத்தில் திடீரென தீப்பற்றியது. இதையடுத்து ஓட்டுநா் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கினாா். உடனடியாக தீத்தடுப்பு கலன் மூலமாக தீயணைக்கப்பட்டது. தவிர தீயணைப்பு, மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைப்பை உறுதிசெய்தனா். தீவிபத்தின்போது, மின்கல வாகனத்தில் யாரும் பயணிக்காததால் பெரும்விபத்து தவிா்க்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.