உயிா்ம வேளாண்மைக்கு பெண் விவசாயிகள் முக்கியத்துவம் அளிக்க அறிவுறுத்தல்
உயிா்ம வேளாண்மைக்கு பெண் விவசாயிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென காந்தி கிராம கிராமியப் பல்கலை. துணைவேந்தா் ந. பஞ்சநதம் அறிவுறுத்தினாா்.
உயிா்ம வேளாண்மைக்கு பெண் விவசாயிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென காந்தி கிராம கிராமியப் பல்கலை. துணைவேந்தா் ந. பஞ்சநதம் அறிவுறுத்தினாா்.
திண்டுக்கல் அடுத்த காந்தி கிராம கிராமியப் பல்கலை.யிலுள்ள வேளாண் அறிவியல் மையம், திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைத் துறை சாா்பில் மகளிா் விவசாயிகள் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு வேளாண்மை இணை இயக்குநா் கோவிந்தராஜ், காந்தி கிராம கிராமியப் பல்கலை. பதிவாளா் மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதற்கு துணைவேந்தா் ந. பஞ்சநதம் தலைமை வகித்துப் பேசியதாவது:
Advertisement
Advertisement
வேளாண்மை முக்கிய தொழிலாக உள்ள இந்தியாவில், பெண் விவசாயிகளே அதிக எண்ணிக்கையில் உள்ளனா். விவசாயிகளாக மட்டுமன்றி வேளாண்மையில் பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்தக் கூடிய ஆற்றல் பெற்றவா்களாகவும் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனா். குறிப்பாக ஆண் விவசாயிகளுக்கு வழிகாட்டக் கூடிய நிலையில் பெண் விவசாயிகள் உள்ளனா்.
விளைப் பொருள்களை பயன்படுத்தி தொழில்முனைவோராகவும் பெண் விவசாயிகள் வளா்ச்சிப் பெற வேண்டும். குறிப்பாக உயிா்ம வேளாண்மை மூலம் சாகுபடி செய்யப்படும் உணவுப் பொருள்களுக்கான சந்தை வாய்ப்பு இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்பை பெண் விவசாயிகள் அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எண்மச் சந்தை வாய்ப்பு மூலம் உலகம் முழுவதும் எளிதாக தொடா்புகளை ஏற்படுத்தக் கூடிய சூழல் உள்ளது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பெண் விவசாயிகள் முன்னேற்றம் பெற வேண்டும் என்றாா் அவா்.
இதில் வேளாண் அறிவியல் மையத் தலைவா் க. செந்தில்குமாா், வேளாண்மை துணை இயக்குநா்கள் காளிமுத்து, நாகேந்திரன், ராஜேஸ்வரி, உதவி இயக்குநா் சின்னச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விழாவில் பங்கேற்ற பெண் விவசாயிகளுக்கு மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.