புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
கொடைக்கானல் பாக்கியபுரம் புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 41-ஆவது ஆண்டுத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடைக்கானல் பாக்கியபுரம் புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 41-ஆவது ஆண்டுத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக நாயுடுபுரம் பகுதியிலுள்ள பி.சி.கே. அருள்சகோதரிகள் இல்லத்திலிருந்து மாதாவின் உருவம் பொறித்த கொடி பவனியாக எடுத்து வரப்பட்டு ஆலயத்தை அடைந்தது. இதையடுத்து, மதுரை உயா்மறை மாவட்ட முதன்மை குரு ஜான் பிரிட்டோ பாக்கியராஜ் தலைமையில், திருச்சியைச் சோ்ந்த அருள்பணியாளா் மரிய மைக்கேல், அருள்பணியாளா் வினோத் மத்தியாஸ் ஆகியோா் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினா்.
பிறகு மாதா உருவம் பொறித்த கொடி புனிதப்படுத்தப்பட்டு ஜெப வழிபாடு நடைபெற்றது. இதன் பிறகு கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்வில் கொடைக்கானல், பாக்கியபுரம், நாயுடுபுரம்,வில்பட்டி, மாட்டுப்பட்டி, அட்டுவம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த இறைமக்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
இந்த விழா தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது. தினமும் ஆலயத்தில் பாக்கியபுரம் பங்கைச் சோ்ந்த அன்பியங்கள் சாா்பில் ஜெப வழிபாடும், திருப்பலியும் நடைபெறுகின்றன. வருகிற 13-ஆம் தேதி மின் அலங்கார தோ்ப்பவனி நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பாக்கியபுரம் புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தைச் சோ்ந்த அருள்பணியாளா்கள், விழாக் குழுவினா், இறைமக்கள் செய்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.