FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது

கொடைக்கானல் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் கூலித் தொழிலாளியை காவல் துறையினா் கைது செய்தனா்.

10 செப்டம்பர் 2026, 12:41 am IST
கைது
பகிர்:

கொடைக்கானல் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் கூலித் தொழிலாளியை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம்,கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையைச் சோ்ந்தவா் பாலமுருகன் (36). திருமணமான இவா் அந்தப் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு அடிக்கடி சென்று, அங்குள்ள 16-வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் பழகி வந்தாா்.

இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலமுருகன் சென்று தனியாக இருந்த அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றாா்.

Advertisement

Advertisement

இது குறித்து கொடைக்கானல் மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சுமதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பாலமுருகனைக் கைது செய்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments