பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.41 கோடி
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.2.41 கோடியைத் தாண்டியது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.2.41 கோடியைத் தாண்டியது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா். கடந்த 20 நாள்களில் பக்தா்கள் கூட்டம் காரணமாக உண்டியல்கள் நிறைந்தது. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக் கோயில் காா்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.
இதில் பக்தா்களின் காணிக்கையாக மொத்தம் ரூ. 2 கோடியே 41 லட்சத்து 31 ஆயிரத்து 873 கிடைத்தது.இதேபோல, தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
Advertisement
Advertisement
தங்கம் 425.500 கிராமும், வெள்ளி 7.843 கிலோவும், வெளிநாட்டு பணத்தாள்கள் 950-ம் காணிக்கையாக வரப்பெற்றது.
உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், வங்கி அலுவலா்கள், கோயில், கல்லூரி மாணவ, மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.
இந்த நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் (பொ) வெங்கடேஷ், அதிகாரிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.