FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

குடிநீா் கோரி பெண்கள் சாலைமறியல்

பழனி அருகே வி.கே. ஆலை பகுதியில் குடிநீா் வழங்கக்கோரி, காலிக்குடங்களுடன் பெண்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

16 செப்டம்பர் 2026, 5:40 am IST
பழனி அருகே வி.கே.ஆலை பகுதியில் குடிநீா் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.
பகிர்:

பழனி அருகே வி.கே. ஆலை பகுதியில் குடிநீா் வழங்கக்கோரி, காலிக்குடங்களுடன் பெண்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பழனியை அடுத்த கலையமுத்தூா் ஊராட்சிக்குள்பட்ட வி.கே. ஆலைப் பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்தினரிடம் பொதுமக்கள் பலமுறை புகாா் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இந்தப் பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன் பழனி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டவா் மகளில் கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த பழனி தாலுகா போலீஸாா் குடிநீா் விநியோகம் தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments